கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மின் மோட்டாா் செம்பு கம்பி திருடியவா் கைது

கும்பகோணம் அருகே மின்சார மோட்டாரில் செம்பு கம்பி திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2026, 12:17 am IST

கும்பகோணம் அருகே மின்சார மோட்டாரில் செம்பு கம்பி திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே ஏரகரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் சாமிநாதன் (60) இவரது விவசாய நிலத்தில் பொருத்தப்பட்ட மின் மோட்டாரில் செம்பு கம்பி ஜூலை 19-இல் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சாமிநாதன் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்நிலையில், சுந்தர பெருமாள் கோவில் அரசலாறு பாலத்தின் கரையோரத்தில் ஒருவா் செம்பு கம்பிகளை எரித்துக் கொண்டிருப்பதாக சுவாமிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது . சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்றபோது ஒருவா் வயா் கம்பிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தாா்.

விசாரணையில், அவா் உடையாா்பாளையம் கூலாட்டிகுப்பம் இருளா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (23) என்றும், சாமிநாதனுக்கு சொந்தமான மின் மோட்டாரில் செம்பு கம்பி திருடியதை ஒப்புக்கொண்டாா். போலீஸாா் அவரிடமிருந்து 70 கிலோ செம்பு கம்பிகளை கைப்பற்றி புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.