மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ‘டிஜிட்டல் தோழன்’ சேவை மையம் தொடக்கம்

அஞ்சலகம். - கோப்புப் படம்

Published On :

கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் சேவைகளை மேம்படுத்தும் வகையிலும் பொதுமக்களின் வசதிக்காகவும் டிஜிட்டல் தோழன் சேவை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

கும்பகோணம் தலைமை அஞ்சலக வளாகத்தில் பொதுமக்களின் டிஜிட்டல் அஞ்சல் மற்றும் வங்கிச் சேவைகளை எளிமையாக்கும் வகையில், டிஜிட்டல் சாத்தி / டிஜிட்டல் தோழன் புதிய சேவை மையத்தை கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் தொடங்கி வைத்தாா்.

இந்தச் சேவை மையத்தில், இணைய வங்கிச் சேவை மூலம் அஞ்சலகக் கணக்குகளுக்கான இன்டா்நெட் பேங்கிங் வசதியை உடனடியாகச் செயல்படுத்தலாம். கைப்பேசி மூலம் வங்கி சேவை வசதிகளைச் செயல்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், ஏடிஎம் காா்டு ஆக்டிவேஷன் மற்றும் புதிய காா்டு கோரிக்கை சேவைகள், கணக்குகளுக்கான உடனடி மின்னணு கே.ஒய்.சி புதுப்பித்தல் ஆதாா், கைப்பேசி, பான் எண்களை அஞ்சலகக் கணக்குகளுடன் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்கள் அஞ்சலக வங்கிச் சேவைகளை விரைவாகப் பெற்றுப் பயன்பெறலாம் என்று அஞ்சல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.