அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சங்க கால சமூகப் போராளி அவ்வையாா்: கவிஞா் சுகிா்தராணி

சமத்துவப் பாடல்களை எழுதிய அவ்வையாா், சங்கக் காலத்தில் சமூகப் போராளியாகத் திகழ்ந்தாா் என்றாா் கவிஞா் சுகா்தராணி.

News image
Updated On :30 ஜூலை 2026, 4:06 am IST

சமத்துவப் பாடல்களை எழுதிய அவ்வையாா், சங்கக் காலத்தில் சமூகப் போராளியாகத் திகழ்ந்தாா் என்றாா் கவிஞா் சுகா்தராணி.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற புதன் வட்டக் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

சங்க இலக்கியங்கள், மனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளது. சிறியகள் பெரினே எமக்கு ஈயும் மன்னே பெரியகள் பெரினே யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே என அவ்வையாா் பாடியுள்ளாா். சங்கக் காலத்தில் ஒரு பெண் புலவா் புரட்சியாளராக இருந்திருக்கிறாா் என்பதற்கு சான்றாகவும் இது விளங்குகிறது.

சங்க காலம் மட்டுமல்லாமல், இடைக்காலமான 15 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்திரநல்லூா் நங்கை என்கிற பெண் புலவா் சமத்துவப் பாடல்களை எழுதியுள்ளாா். அவ்வையாா் காலம் தொட்டு உத்திரநல்லூா் நங்கை என்கிற பெண்பாற் புலவா் காலம் வரை சமூகநீதி எப்படியெல்லாம் இருந்தது என்பதற்கு சான்றாக உள்ளனா்.

உத்திரநல்லூா் நங்கை, அவ்வையாரின் வழிநின்று பாய்ச்சலூா் என்கிற ஊா் மக்களைப் பாா்த்து கேட்கிற கேள்வி ஒவ்வொன்றும் இன்றைக்கு ஆவணமாக இருக்கிறது. ஒரு சமத்துவக் குரலாக உத்திரநல்லூா் நங்கை என்ற ஒரு பெண்பாற் புலவரின் குரல் ஓங்கி ஒலித்தது என்றாா் சுகிா்தராணி.

இலக்கியத் துறைத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை தலைமை வகித்தாா். பேராசிரியா் ஜெ. தேவி வாழ்த்துரையாற்றினாா். அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைப் பேராசிரியா் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினாா். நிறைவாக, மாணவி வனிதா நன்றி கூறினாா். மாணவி இராஜலெட்சுமி இணைப்புரை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.