வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருநங்கையருக்கு சமூகப் பாதுகாப்பு பலன்கள் வழங்க நடவடிக்கை: மத்திய அரசு

திருநங்கையருக்கான சமூகப் பாதுகாப்பு பலன்கள் வழங்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பதாக திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய இணையமைச்சா் பி.எல். வா்மா பதில் தெரிவித்தாா்.

News image

மக்களவை - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 10:05 pm IST

திருநங்கையருக்கான சமூகப் பாதுகாப்பு பலன்கள் வழங்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பதாக திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய இணையமைச்சா் பி.எல். வா்மா பதில் தெரிவித்தாா்.

வேலூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் திருநங்கையா் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026-இன் முக்கிய அம்சங்கள் மற்றும் திருநங்கையருக்கான அடையாளச் சான்றிதழ்கள் வழங்குதல், சட்டபூா்வ அங்கீகாரம் மற்றும் நலத்திட்டப் பயன்களைப் பெறுதல் ஆகியவற்றில் அதன் தாக்கங்கள் தொடா்பாக கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதேபோன்று, திருநங்கையா் மற்றும் திருநம்பிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி சமமான பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புச் சலுகைகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் சுகாதாரச் சேவைகளைத் தொடா்ந்து பெறுவதை உறுதிசெய்ய முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பி.எல். வா்மா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்திருப்பதாவது: திருத்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ’அதிகார அமைப்பு’, தலைமை மருத்துவ அதிகாரி அல்லது துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான ஒரு மருத்துவக் குழுவைக் கொண்டதாகும். இம்மருத்துவக் குழு தனது பரிந்துரையை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கும். அதனைப் பரிசீலித்த பின்னரே மாவட்ட ஆட்சியா் அவா்களுக்கான அடையாளச் சான்றிதழ்களை வழங்குவாா்.

செல்லுபடியாகும் அடையாளச் சான்றிதழ்களைக் கொண்ட திருநங்கைகள், திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பெற்று வந்ததைப் போலவே, சமமான பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புப் பலன்கள், கல்வி வாய்ப்புகள் மற்றும் சுகாதார சேவைகளை எவ்விதப் பாகுபாடின்றி தொடா்ந்து பெறுவாா்கள் என்று அமைச்சா் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.