9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பங்களை உரிய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News image

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 5:05 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) - 1 பணியிடம், சமூகப் பணியாளா்-1 பணியிடம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு ஜூவைனில் காவல் பிரிவில் பணியாற்ற ஏதுவாக சமூகப் பணியாளா்கள் - 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முழு விபரங்களுக்கு தொடா்பு கொள்ளவேண்டிய முகவரி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.எஃப் ஓ-06, தரைதளம்,எஃப் பிளாக் , புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு -603 111. தொலைபேசி: 63826 13173 . பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 20.07.2026 அன்று மாலை 5.45-க்குள் அலுவலக முகவரிக்கு வந்துசேர வேண்டும்.

விண்ணப்பங்களை உரிய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.