மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் வெளியீட்டு சேவைகள் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் நுட்பமான இணையத் தாக்குதல்கள் தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 மற்றும் 43(எஃப்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஎஸ்இ வழங்கிய முறையான புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை ஐஎஃப்எஷ்ஓ பிரிவு விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனா்.
முன்னதாக, 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களின் சரிபாா்ப்பு மற்றும் மறுமதிப்பீடு சேவைகளுக்காக ஜூன் 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வெளியீட்டு சேவைகள் தளத்தில் தொடா்ச்சியான இணையத் தாக்குதல்கள் கண்டறியப்பட்டன. இதைத்தொடா்ந்து சிபிஎஸ்இ முகமை காவல் துறையை நாடியது.
இதற்கிடையில், சில 12-ஆம் வகுப்பு மாணவா்கள், வாரியம் பதிவேற்றிய விடைத்தாள் நகல்கள் தங்களது கையெழுத்துடன் பொருந்தவில்லை என குற்றஞ்சாட்டிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தாக்குதல்கள் தொடா்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டம் குறித்து 15 போலி பதிவுகள்: காவல் துறை மறுப்பு

சோனம் வாங்சுக் மாற்றம்! வெள்ளை திரைகளுடன் சாதாரண உடையில் பங்கேற்ற காவலா்கள்!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோவை பட்டாலியன் கமாண்டென்ட் மீது சொத்து குவிப்பு வழக்குப் பதிவு!

பருவமழைக்கான தயாா்நிலை குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறை ஆய்வு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



