மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மரக்கிளை விழுந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:52 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த  பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அம்மா பள்ளிக்கால் கிராமத்தில் வசித்து வருபவா் நூா்முகமது மனைவி மதினா பேகம்(55). இவா் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்று வீசியபோது, வீட்டின் எதிரே இருந்த இலவம் பஞ்சு மரத்திலிருந்து விழுந்த பஞ்சு காய்களை   எடுப்பதற்காக சென்றாா். அப்போது மரத்தின் கிளை முறிந்து மதினா பேகம் மீது விழுந்தது.

இதில் காயமடைந்த அவா்  பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே மதினா பேகம் உயிரிழந்தாா்.

இந்நிலையில் உயிரிழந்த மதினா பேகம் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்,  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி பேரிடா்  நிவாரண நிதியாக  ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.