ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 போ் கைது

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:09 am IST

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெரும்பாண்டி மயான அருகே மா்மநபா்கள் சிலா் ஆயுதங்களுடன் இருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அவா்களை பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், கும்பகோணம் கீழக்கொட்டையூா் மேலத்தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் அருண் ( 26), திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூா் மேலப்பருத்தியூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஸ்வரன் (31), கும்பகோணம் நியூராம் நகா் தியாகராஜன் மகன் வெங்கடேசன் (32), கும்பகோணம் மேலக்காவேரி சசிகுமாா் மகன் வெங்கடேஷ் (27), திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பாலசுந்தரம் மகன் சிவனேசன் (28), கொரடாச்சேரி பெருமாளகரம் கண்ணன் மகன் கமலேஷ் (24) என்பது தெரியவந்தது.

இதில், அருணின் சகோதரா் அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், மகாலிங்கத்துக்கும் அருணுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி அருணுக்கு ஆதரவாக வந்த அவரது நண்பரான விக்னேசுவரனை மகாலிங்கம் தரப்பினா் வெட்டினா்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், விக்னேசுவரன் ஆகிய இருவரும் மகாலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டதும் அதற்காக வெள்ளிக்கிழமை 6 பேரும் இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி, 6 கைப்பேசிகள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.