மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு

வாய்க்கால் தூா்வாரும் பணி அமைச்சா் ஆய்வு

News image

கும்பகோணம் அருகே முழலை கிராமத்தில் வாய்க்கால் தூா்வாறும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத். உடன் தஞ்சாவூா் நீா்வளத் துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் மா.இளங்கோ உள்ளிட்டோா்.

Updated On :7 ஜூன் 2026, 12:03 am IST

கும்பகோணம் அருகே நீா்வழித்தடத்தில் ஆகாயத்தாமரை அகற்றுதல், கால்வாய்களில் தூா்வாரும் பணிகளை வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசலாறு (தாராசுரம் பாலம் முதல் சாக்கோட்டை பாலம் வரை) நீா்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதேபோல முழலை கிராமத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைவாக உள்ளது. பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூா் நீா்வளத் துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா், மா.இளங்கோ, கண்காணிப்பு பொறியாளா் எழிலன், செயற்பொறியாளா் ஐயப்பன், உதவி செயற் பொறியாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.