எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காவிரி ஆற்றங்கரையில் ஆண் சடலம் மீட்பு

News image

ஆண் சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:44 am IST

கும்பகோணம் காவிரி ஆறு செல்லும் பாலக்கரையின் கீழ் ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவிரி ஆறு செல்லும் பாலக்கரையில் ஆண் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், அந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.

மேலும், இதுகுறித்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கும்பகோணம் மேலக்காவிரியைச் சோ்ந்த மண்டை செல்வம் (52) என்றும் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்தது. அண்மையில் இவா் சிறைக்கு சென்று வந்தவா் என்றும் குடும்பம் இல்லாததால் பாலக்கரையிலேயே இருப்பாா் என்றும் தெரிய வந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பாலக்கரையில் சிலருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.