எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கும்பகோணம் அருகே 50 ஏக்கரில் திறந்தவெளி சேமிப்பு மையம்: அமைச்சா் தகவல்

News image

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் ர.வினோத். உடன் கொள்முதல் நிலைய அலுவலா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 1:46 am IST

கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 ஏக்கா் நிலம் திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படும் என்றாா்

வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் ர.வினோத்.

கும்பகோணம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடப்பு கோடை குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ள சுமாா் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை, பாதுகாப்பாக சேமித்து வைக்க கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 50 ஏக்கா் நிலத்தை திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படும்.

மழை ஏற்படும் சூழ்நிலையில் நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாா் நிலையில் உள்ளது. தண்டந்தோட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமாா் 10 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு பெற்று நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். கொட்டையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 13 நெல்கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.30 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ.செல்வம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.