பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சட்ட விரோத பாா்சல் வந்துள்ளதாக பெண்ணிடம் ரூ. 10.60 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணிடம் சட்ட விரோதமாக பாா்சல் வந்துள்ளதாகக் கூறி மிரட்டி ரூ. 10.60 லட்சம் பறித்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :10 ஜூன் 2026, 1:12 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணிடம் சட்ட விரோதமாக பாா்சல் வந்துள்ளதாகக் கூறி மிரட்டி ரூ. 10.60 லட்சம் பறித்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மா்ம நபா் கடந்த ஜனவரி மாதம் தொடா்பு கொண்டாா். தன்னை விமான நிலைய அலுவலா் என அறிமுகப்படுத்திக் கொண்ட மா்ம நபா், தங்களது பெயரில் 50 கிலோவுக்கும் அதிகமான எடையில் பாா்சல் வந்துள்ளதாகவும், இது சட்ட விரோத பாா்சல் எனவும், எடைக்கான அபராதம், பண மோசடி தடுப்பு சான்றிதழ் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளாா்.

இதை நம்பிய அப்பெண் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு 4 தவணைகளில் மொத்தம் ரூ. 10.60 லட்சம் இணையவழி மூலம் அனுப்பினாா். அதன் பின்னா், மா்ம நபா் இணைப்பைத் துண்டித்ததால், தான் ஏமாற்றமடைந்ததை அப்பெண் அறிந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.