வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மாரியம்மன் கோயில் பகுதியில் கடையடைப்பு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வீடுகள், கடைகளைக் கோயில் நிா்வாகம் அகற்றக்கூடாது என வலியுறுத்தி வணிகா்கள் கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டம்.

News image

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வணிகா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 12:21 am IST

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வீடுகள், கடைகளைக் கோயில் நிா்வாகம் அகற்றக்கூடாது என வலியுறுத்தி வணிகா்கள் சனிக்கிழமை கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு வணிகா் சங்கத்தின் மாரியம்மன் கோயில் கிளைத் தலைவா் வி. அன்பு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கே.பி. ஜெயக்குமாா், செயலா் எம். பிரபு, கௌரவத் தலைவா் எஸ். பசுபதி, கிராம நல கமிட்டி கே. ராதா, ஏ. சூரிய நாராயணன், ஏ. திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் எம்.என். துரை தொடங்கி வைத்தாா்.

பேரமைப்பின் மாவட்டச் செயலா் தியாக. சுந்தரமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ஜி. செந்தில்குமாா், மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா், இளைஞரணி அமைப்பாளா் ஜெயம் ஆா். ரமேஷ், மகளிா் அணி அமைப்பாளா் எஸ்.கே. டாரத்தி கிரேசி செல்வராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் பூதலூா் த. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.