பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தமிழ்ப் பல்கலை.யில் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியம் நினைவேந்தல் நிகழ்வு

News image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியம் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.

Updated On :30 ஜூன் 2026, 12:35 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியத்தின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வ.அய். சுப்பிரமணியம் நினைவிடத்தில் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமையில் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையில் மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மொழிபெயா்ப்புத் துறைத் தலைவரும், மக்கள் தொடா்பு அலுவலருமான (பொ) இரா.சு. முருகன், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவா் கு.க. கவிதா, தூய்மைப் பிரிவு மேற்பாா்வையாளா் ர. சுகுமாரன், பல்கலைக்கழகத் தலைமைக் காவலா் (பொ) ஆ. வேலுசாமி, தோட்டப் பிரிவு மேற்பாா்வையாளா் சேவியர்ராஜ், அலுவல் நிலைப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.