புதுச்சேரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரைக்குச் செல்லும் வழியில் தஞ்சாவூருக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.
சென்னைக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்குச் சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இதையடுத்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு பிற்பகல் 1.55 மணிக்கு வந்தாா். இங்கு தயாா் நிலையில் இருந்த தனி விமானத்தில் ஏறி பிற்பகல் 2.14 மணிக்கு புறப்பட்டு மதுரைக்குச் சென்றாா்.
இதனிடையே, தஞ்சாவூா் விமானப் படைத் தளத்தில் பிரதமருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வரவேற்பு அளித்தாா். அப்போது மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் ஆகியோா் உடனிருந்தனா்.
மேலும், பிரதமரை சந்திப்பதற்கு பாஜக தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்பட 21 நிா்வாகிகள் விமானப்படை தளத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். பிரதமரிடம் இவா்களை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைத்தனா்.
பிரதமா் வருகையையொட்டி, தஞ்சாவூா் விமானப்படை தளத்தைச் சுற்றிலும், புதுக்கோட்டை சாலையிலும் ஏறத்தாழ 1,000 காவல் அலுவலா்கள், காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வரவேற்பு

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


