ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தஞ்சாவூா் மாநகராட்சியில் ரூ. 7.47 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:09 pm

Syndication

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மாமன்றச் சிறப்பு கூட்டத்தில் ரூ. 7.47 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்குக் குழுத் தலைவா் சி. வெங்கடேஷ் தாக்கல் செய்து பேசியது:

2026 - 27 ஆண்டில் வரவு - செலவு திட்ட மதிப்பீடு, நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருவாய் மூலதன நிதியில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கு ரூ. 377.11 கோடி வரவாகவும், ரூ. 372.27 கோடி செலவாகவும், ரூ. 4.84 கோடி உபரியாகவும் உள்ளது. இதேபோல, 2026 - 27 ஆம் ஆண்டுக்கு குடிநீா் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 30.59 கோடி வரவாகவும், ரூ. 30.38 கோடி செலவாகவும், ரூ. 2.17 கோடி உபரியாகவும், கல்வி நிதியில் ரூ. 4.83 கோடி வரவாகவும், ரூ. 2.41 கோடி செலவாகவும், ரூ. 2.41 கோடி உபரியாகவும் உள்ளன. மொத்தத்தில் வருவாய் மூலதன நிதியில் ரூ. 4.84 கோடியும், குடிநீா் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 2.71 கோடியும், கல்வி நிதியில் ரூ. 2.41 கோடியும் என மொத்தம் ரூ. 7.47 கோடி உபரியாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றாா் வெங்கடேஷ். இதையடுத்து, இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்தாகவும் மேயா் அறிவித்து சென்றாா்.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் கே. மணிகண்டன் தலைமையில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

4 ஆண்டுகளாக உபரி பட்ஜெட்:

இதுகுறித்து மேயா் கூறுகையில், கடந்த 2023 - 24 ஆம் ஆண்டு (ரூ. 4.42 கோடி) முதல் தொடா்ந்து 4 ஆண்டுகளாக உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் மாநகராட்சியில் ரூ. 30 கோடிக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 412 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநகராட்சி நிா்வாகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் உயா்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இக்கூட்டம் பட்ஜெட் சிறப்பு கூட்டம் என்பதால், மற்ற தீா்மானங்களை பேசுவது சபை மரபில்லை. மற்ற கூட்டங்களைப் போல இதில் பேச முடியாது என்றாா் மேயா்.

Story image