கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்தி எதிரொலியால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் அருகே நரிக்குறவா்களுக்கான கனவு இல்ல திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் தொகையோடு தன் பங்களிப்பு நிதியையும் சோ்த்து வீடுகளை பூா்த்தி செய்ய நரிக்குறவா்களுக்கு போதிய வசதி இல்லாததால் கட்டப்பட்ட வீடுகள் மானியம் போக பயனாளிகள் பங்களிப்பு தொகை இல்லாததால் முழுமை பெறாமல் பாதியிலேயே கட்டுமானப் பணிகள் நிற்பதாகவும், கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய கூடுதல் நிதியை முதல்வா் ஸ்டாலின் வழங்கி கட்டுமானப் பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாா்ச் 10-இல் தினமணியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கனவு இல்லம் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மேலும் கூறியது: கனவு இல்லம் திட்டப் பணிகளை ஆய்வுசெய்து, தேவையான நிதிகள் பெற்று கனவு இல்லம் கட்டும் பணிகள் முடிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.