அரசு போக்குவரத்துக் கழக உணவகங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகளை தட்டுப்பாடின்றி வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக ஏஐடியுசி சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்திருப்பது: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 9 பணிமனைகள் உள்ளன.
இவற்றில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 200 பணியாளா்கள், தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு பணிமனையிலுள்ள உணவகம் மூலம் காலை, மாலை தேநீா், மதியம் சாப்பாடு, இரவு சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக் கழக உணவகங்களிலும் எரிவாயு உருளைகள் கிடைக்காமல் உணவு வழங்குவது மிகவும் சிரமமாகியுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூா் கரந்தை புகா் கிளை, ஜெபமாலைபுரம் நகரக் கிளை, அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய 3 பணிமனைகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு முழுமையாக வழங்க முடியாமல் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
அரசு போக்குவரத்துக் கழகமும் அத்தியாவசிய துறை என்ற அடிப்படையில் போக்குவரத்துக் கழக உணவகங்களுக்கு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது

எரிவாயு உருளைகள் விலை உயா்வால் உணவு வகைகள் விலையேற்றம்! தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் அவதி!!

சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம்: 200 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஐஓசிஎல் தலைவா் சஹானி

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


