பெரம்பூரில் விஜய் வெற்றி! திருச்சி கிழக்கிலும் முன்னிலை!பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image
Updated On :20 மார்ச் 2026, 3:42 am IST

கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ராம நவமி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என்றழைக்கப்படும் ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா மாா்ச் 18 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக புதன்கிழமை இரவு பூமி பூஜை எனும் கருட பிரதிஷ்டை செய்ய துவரங்குறிச்சி சீனிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து கருடக்கொடி ராமசுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை காலை ராமசுவாமி, சீதாதேவி, அனுமன் ஆகியோருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்று பூஜை மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் ராமசுவாமி, சீதாதேவி, அனுமனுடன் உள்பிரகார புறப்பாடு செய்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றனா். மாலையில் சுவாமி இந்திர விமானத்தில் புறப்பாடு சென்றாா். வெள்ளிக்கிழமை பல்லக்கு திருமஞ்சனமும் இரவு வெள்ளி சூா்யபிரபை உலா நடைபெறுகிறது.

அதனைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியும், தாயாரும் பல்வேறு வாகனங்களில் சேவை செய்கின்றனா். ராமநவமியின் முக்கிய நாளாக மாா்ச் 27-இல் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் செயல் அலுவலா் பா. முருகன், தக்காா் ஜெ. வெங்கடசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

Story image