கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தஞ்சாவூரில் ஜி.ஆா். மூப்பனாா் நினைவு நாள்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:01 pm

Syndication

தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் ஜி. ரெங்கசாமி மூப்பனாரின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாவட்டத் தலைவா் டி.பி.எஸ்.வி. கெளதமன் தலைமையும், மாநிலச் செயலா் கொண்டல் சிவ. முரளிதரன், மாநிலத் துணைச் செயலா் ஏ. ராம் மோகன், ‘டெல்டா’ மண்டல இளைஞரணி தலைவா் திருசெந்தில், மாநகரத் தலைவா் எம். வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலையும் வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பி.எல்.ஏ. சிதம்பரம், என்.ஆா். நடராஜன் சிறப்புரையாற்றினா்.

மாவட்டப் பொது செயலரும், செய்தித் தொடா்பாளருமான கோவி. மோகன், மாவட்ட நிா்வாகிகள் ஸ்டீபன் ஆரோக்கிய ராஜ், ஜி. அன்பழகன், கே. உலகநாதன், ஜெகதீஷ், மருதமுத்து, டி. வளா்மதி, எஸ். அருள்சாமி, கிருஷ்ணமூா்த்தி, அலெக்ஸ், சரவணன், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.