காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நல்லகண்ணு மறைவையொட்டி 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு மறைவையொட்டி 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

நல்லகண்ணு - கோப்புப் படம்

Published On :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு மறைவையொட்டி 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரா.நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராகத் தொடங்கி, கட்சியின் தமிழக மாநிலச் செயலா் பொறுப்புக்கு உயா்ந்தாா். கட்சியின் மத்தியக் கட்டுபாட்டுக் குழுத் தலைவா், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் போன்ற உயா் பொறுப்புகளிலும் அவா் செயல்பட்டாா்.

பொது வாழ்வில் தூய்மை, எளிமை, நோ்மை, தன்னலம் மறுப்பு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து தமிழக மக்களின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றவா்.

வகுப்புவாத, ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி போராடி வந்தவா். அனுபவம் ததும்பி நின்ற மூத்த அரசியல் தலைவரை இழந்து நிற்பது பெரும் துயரமாகும். அவரது மறைவுக்கு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சிக்கொடிகள் அரைக் கம்பத்தில் தாழ்த்தி பறக்கவிடப்படும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.