கூட்டத்தில் வடுகா் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலும், கம்மவாா்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலும் சோ்க்க வேண்டும். தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் என்ற சான்றிதழ் தடையில்லாமல் (இணையதளம் மூலம்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலில் தெலுங்கு பேசுபவா்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுக்கு கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.