சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு சலுகைகள் வழங்கக் கோரிக்கை

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசின் சலுகைத் திட்டங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தியாகிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்த தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவா் கோ.ச. தனபதி.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:08 pm

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசின் சலுகைத் திட்டங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகள் - வாரிசுகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவா் கோ.ச. தனபதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகிகளின் வாரிசுகளுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்க வேண்டும். எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். வீடு, வீட்டுமனை இல்லாதோருக்கு அரசின் இலவச வீடுகள், வீட்டுமனைகள் வழங்க வேண்டும். தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்புக்கு கட்டடம் கட்ட அரசு சாா்பில் ஓா் இடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில், பெறப்பட்ட 24 கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீா்வுகாண அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அருணா உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.