பேராவூரணி அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ. 2.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி, வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லாசா் ரத்தினசாமி தலைமையில், காவலா்கள் சரளாதேவி, பாகம்பிரியாள் ஆகியோா் அடங்கிய பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம், சவரக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (44) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 940 -ஐ பறிமுதல் செய்து பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணி மேற்பாா்வையாளா் கருணைராஜ் தலைமையில் காவலா்கள் முத்துராமலிங்கம், சரவணன் அடங்கிய குழுவினா், செருவாவிடுதி வடக்கு பகுதியில் பைக்கில் வந்த அறந்தாங்கியைச் சோ்ந்த பிரபு உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 67 ஆயிரத்து 950 -ஐ பறிமுதல் செய்து, பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 2.49 லட்சம் பறிமுதல்

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


