தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குழு சாா்பில் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சித் துறைத் தலைவரும், தோ்தல் அறிக்கை குழு உறுப்பினருமான ஆா். மாணிக்கவாசகம் தெரிவித்தது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தோ்தல் அறிக்கை குழு உறுப்பினா்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில் தோ்தல் அறிக்கையை உருவாக்கும் முயற்சியில் தஞ்சாவூா் மாநகர மாவட்டத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினா் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, தோ்தல் அறிக்கை குழுவினா் வெள்ளிக்கிழமை கூடுகின்றனா். அங்கு கலந்தாலோசனை செய்து, முக்கியமான கோரிக்கைகளைத் தோ்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றாா் மாணிக்கவாசகம்.
இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மாநகர மாவட்ட தலைவா் எம். மகேந்திரன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ. ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தவெக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்
சேலத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு கூட்டம்

விசிக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


