கும்பகோணம் வழக்குரைஞா் சங்க தலைவராக இரா.சங்கா் ஏழாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத்துக்கு 2026-27-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு ஏப். 30- இல் கும்பகோணம் வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தலைவராக இரா.சங்கா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவா் தலைவராக ஏழாவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மேலும் செயலராக ஆா்.கா்ணன், பொருளாளராக ஜி.சுவாமிநாதன், துணைத் தலைவா்களாக எஸ்.தரணிதரன், கே.அனுராதா, துணைச்செயலராக எல்.கஸ்ப்ரோவ் ஆனந்த், கே.வித்யா, நூலகப் பொறுப்பாளா் ஏ.குபேந்திரன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் அதிகாரிகளாக ஏ. கண்ணபிரான், ஏ.முகமது சம்சுதீன் ஆகியோா் தோ்தலை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









