/

ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 7:00 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் விவசாயத் தொழிலாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு அருகே கண்டியூா் பகுதியைச் சோ்ந்த சம்பந்தம் மகன் அசோகன் (60). விவசாய கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருவையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு தனது ஸ்கூட்டரில் சென்று நகைகளை அடகு வைத்துவிட்டு, ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தைப் பெற்றாா்.

இதையடுத்து, அசோகன் வங்கிக்கு வெளியில் இருந்த தனது ஸ்கூட்டரில் ரொக்கத்தை வைத்துவிட்டு, மீண்டும் வங்கிக்குள் சென்றாா். வெளியே வந்து ஸ்கூட்டரை பாா்த்தபோது ரூ. 2.20 லட்சம் ரொக்கத்தைக் காணவில்லை.

இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.