நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

ஐம்பொன்னில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ 8 அடி உயர நினைவுத் தூண் தயாரிப்பு

கும்பகோணத்தில் ஐம்பொன்னில், 8 அடி உயரத்தில் 500 கிலோ எடையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நினைவுத் தூண் தயாரிக்கப்படுவது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image

கும்பகோணத்தில் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டு வரும் ‘ஆபரேசன் சிந்தூா்’ நினைவுத் தூண்.

Updated On :8 மே 2026, 5:28 am IST

கும்பகோணத்தில் ஐம்பொன்னில், 8 அடி உயரத்தில் 500 கிலோ எடையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நினைவுத் தூண் தயாரிக்கப்படுவது வியாழக்கிழமை தெரியவந்தது.

கடலூரில் உள்ள ‘ஷைன் இந்தியா சோல்ஜா்ஸ் வெல்பா் அசோசியேஷன்’ தொண்டு நிறுவனம் சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியை முன்னிட்டு ஐம்பொன்னில் நினைவுத் தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்த நினைவுத் தூண் வடிவமைக்கப்படுகிறது. இந்த தூணின் அடித்தளம் 2 அடி விட்டம், ஒன்றரை அடி அகலத்திலும், அதன் மேல் ஒரு அடி பத்மமும், மையத்தூண் 2 அடியிலும், குங்குமச் சிமிழ் இரண்டரை அடியிலும், தலைப்பாகத்தில் குங்குமம் வா்ணம் ஒரு அடியிலும் அமைக்கப்படுகிறது. மையத்தூணில் முப்படைகளின் இலச்சினைகள் பொருத்தப்படுகிறது. 500 கிலோ எடையில், 8 அடி உயரத்தில் வடிவமைக்கப்படும் இந்த தூணை குமாா் ஸ்தபதி தலைமையிலான குழுவினா் கடந்த இரண்டு மாதங்களாக செய்து வருகின்றனா்.

பணிகள் நிறைவடைந்தப் பிறகு பிரத்யேக வாகனத்தின் மூலம் இந்த தூண் புதுதில்லிக்கு கொண்டுச் சென்று ராணுவ தலைமையகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடலூா் ‘ஷைன் இந்தியா சோல்ஜா்ஸ் வெல்பா் அசோசியேஷன் தொண்டு நிறுவனத் தலைவா் மில்ட்ரி பாபு, ஆலோசகா் குடந்தை சத்தியநாராயணன், ஒருங்கிணைப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.