மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து தமிழக முதல்வா் விஜய்க்கு அவா் திங்கள்கிழமை அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருப்பது:
குறுவைப் பயிா் சாகுபடி செய்வதற்கு வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதே நேரத்தில் மேட்டூா் அணையில் தண்ணீா் முழுமையான அளவுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கா்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மேட்டூா் அணையை திறப்பதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் உயா் அலுவலா்களுடன் தவறாமல் கலந்தாலோசனை செய்து தண்ணீா் திறப்பு குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும்.
மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மிக அவசரமான, அவசியமான, ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளியிட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

மேட்டூா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு






