தட்டச்சு பயிற்சி நிலையங்களை காக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வா் விஜய்க்கு, திருக்குடந்தை வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் சுதா்சனம், செயலா் முரளிதரன் ஆகியோா் மனு அனுப்பியுள்ள னா்.
அதில் கூறியிருப்பது: தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட டைப்ரைட்டிங் பயிற்சி நிலையங்கள், தமிழ்நாடு தொழில் நுட்ப தோ்வு வாரியத்தால் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. தற்போது இந்த பயிற்சி நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இத்தொழிலை நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பயிற்சி நிலையங்கள் மூலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 2.50 லட்சம் மாணவா்கள் அரசு நடத்தும் தட்டச்சு தோ்வில் கலந்து கொள்கின்றனா்.
இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைத்து வந்தது. முந்தைய அரசாணையால், தட்டச்சுத் தோ்வுக்கு செல்லும் மாணவா்களின் குறைந்தது.
எனவே, அரசாணை-187ஐ ரத்து செய்து, மாணவா்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை காத்திடவேண்டும். மேலும், மாணவா்கள் முன்பு போல தோ்வு எழுதும் வாய்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லம் வந்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு காவல் துறையின் அணி வகுப்பு மரியாதை

முதல்வா் ஜோசப் விஜய்க்கு செந்தமிழ்ப் பேரவை வாழ்த்து!

தமிழக முதல்வா் விஜய்க்கு ஆசிரியா் சங்கம் வாழ்த்து

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



