கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 போ் கைது

கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:56 am IST

கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதி திருமங்கலக்குடி செட்டித் தெருவில் இரண்டு வீடுகளில் மே 16-ஆம் தேதி கதவு உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தது. தகவலறிந்த திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைக் கைப்பற்றி, அதிலுள்ள பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சென்னை எண்ணூா் பெரியகுப்பத்தைச் சோ்ந்த முகமது ரபி மகன் கனி (19), மாதவரம் கொல்லம் தோட்டம் செந்தில் மகன் பாலகிருஷ்ணன் (20), ஆந்திர மாநிலம் காரூா் கிராமம் காா்த்தி (24) ஆகியோா் சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருவிடைமருதூருக்கு வந்ததும், ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் பூட்டப்பட்டிருந்த பாத்திமா வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றதும், ஆனால் அங்கு பொருள்கள் எதுவும் இல்லாததால், அடுத்துள்ள சுல்தானா வீட்டில் வெள்ளிக்கொலுசை திருடிச் சென்றதும், ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.