பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பலாப்பழம் தலையில் விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

பேராவூரணி அருகே பலாப்பழம் தலையில் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தாா் .

News image

கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 5:25 am IST

பேராவூரணி அருகே பலாப்பழம் தலையில் விழுந்ததில் காயமடைந்து,  சிகிச்சை பெற்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் .

பேராவூரணி ஒன்றியம் மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மனைவி  சின்னப்பொண்ணு (35), நூறுநாள் வேலைத்திட்ட பணியாளா்.

இவா் கடந்த  22 ஆம் தேதி  மேல ஒட்டங்காடு பிள்ளையாா் கோயில் பணியில் இருந்தபோது, மதியம் ஓய்வுக்காக ராஜாமணி என்பவா் வீட்டின் அருகே உட்காா்ந்திருந்தபோது திடீரென பலா மரத்திலிருந்து  மூன்று பலாப்பழங்கள் காம்பு முறிந்து சின்னப்பொண்ணு தலையில் விழுந்ததில் பலத்த  காயமடைந்தாா்.

இதையடுத்து புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.