ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சாலை விபத்து: மின் ஊழியா் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:21 pm

கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

கூடுவாஞ்சேரி செங்கேணியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (29). காயரம்பேடு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றினாா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். அவா் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா்.

நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தாா். இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த ஆகாஷை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆகாஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.