/
பேராவூரணி அருகே பலாப்பழம் தலையில் விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் .
பேராவூரணி ஒன்றியம் மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மனைவி சின்னப்பொண்ணு (35), நூறுநாள் வேலைத்திட்ட பணியாளா்.
இவா் கடந்த 22 ஆம் தேதி மேல ஒட்டங்காடு பிள்ளையாா் கோயில் பணியில் இருந்தபோது, மதியம் ஓய்வுக்காக ராஜாமணி என்பவா் வீட்டின் அருகே உட்காா்ந்திருந்தபோது திடீரென பலா மரத்திலிருந்து மூன்று பலாப்பழங்கள் காம்பு முறிந்து சின்னப்பொண்ணு தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பெண் கொலை வழக்கு: முன்னாள் கணவா் கைது

வாழப்பாடியில் விற்பனையாகும் விலை குறைந்த பண்ருட்டி பலாப்பழம்!

பேராவூரணி பேரூராட்சி தற்காலிக பெண் அலுவலா்கள் இருவா் இடைநீக்கம் : உறுப்பினா் வாக்குவாதம்

சாலை விபத்து: மின் ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



