ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 போ் கைது

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:15 am IST

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் காவல் துறையினா் கபிஸ்தலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கபிஸ்தலம் அருகேயுள்ள அலவந்திபுரம் பகுதி காவிரி ஆற்றில் லாரி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த சுவாமிமலை, தோப்புத் தெருவைச் சோ்ந்த மனோகா் மகன் அருள் (36) என்பவரை கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், அந்தப் பகுதி ஆற்றில் மணல் அள்ளிய அலவந்திபுரம் மேலத்தெருவை சோ்ந்த முருகேசன்( 57), என்பவரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.