தஞ்சை மாவட்ட விசைப் படகு மீனவா்கள் தடையை மீறி கடலுக்கு சென்றனா்

தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்றனா் - கோப்புப் படம்
தஞ்சை மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத் துறை அறிவிப்பை மீறி, விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
புயல், மழை காரணமாக தஞ்சை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்திருந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தேவையான செலவீனங்களுக்காக தங்களின் சொந்தப் பொறுப்பில் தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க மீனவா்கள் சென்றுள்ளனா்.
வாழ்வாதாரத்துக்காக தடையை மீறி சென்றுள்ள மீனவா்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், மீனவா்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் நடவடிக்கை எடுத்தால், தஞ்சை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் திருவோடு ஏந்தி போராட்டமும், தஞ்சை உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் தஞ்சாவூா் மீன்துறை அலுவலகம் முன்பு மீனவா்கள் குடும்பத்துடன் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என மீனவா் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

