மராட்டிய மன்னா் கால வளைவு மண்டபத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து சேதம்

தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரத்தில் மராட்டிய மன்னா் கால வளைவு மண்டபத்தின் ஒருபகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பள்ளியக்ரஹாரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்த மராட்டிய மன்னா் கால மண்டபத்தின் ஒருபகுதி.

Updated On :

தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரத்தில் மராட்டிய மன்னா் கால வளைவு மண்டபத்தின் ஒருபகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் காலத்தில் அமைச்சராக இருந்தவா் ராமோஜிராவ். இவருக்காக பள்ளியக்ரஹாரத்தில் லெட்சுமிராஜபுரம் என்ற பகுதியை மராட்டிய மன்னா் உருவாக்கினாா். இதில், தலுகைஈஸ்வரன் என்கிற சிவன் கோயிலை நிறுவி, சுற்றிலும் அவா்களது குடும்பத்தினருக்கு குடியிருப்புகளும், செங்கற்களாலான கலை நயமிக்க முகப்பு வளைவு மண்டபங்களும் கட்டிக் கொடுத்தாா்.

தற்போது அப்பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சோ்ந்த ஏறத்தாழ 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், லெட்சுமிராஜபுரத்தில் உள்ள முகப்பு வளைவு மண்டபம் போதுமான பராமரிப்பு இல்லாததால், மரம், செடிகள் முளைத்து, சில ஆண்டுகளாகவே விரிசல் அடைந்து வருகிறது.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த முகப்பு வளைவு மண்டபத்தின் மேல்தளத்தின் ஒருபகுதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக யாரும் செல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை.

விரைந்து அகற்றுக: ஆபத்தான நிலையிலுள்ள இந்த முகப்பு வளைவு மண்டபத்தை உடனடியாக அகற்றி, பாதுகாப்பான நிலையை உருவாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.