கும்பகோணம் ராமசுவாமி, கெளதமேசுவரா் கோயில்களில் பாலாலய பூஜை

கும்பகோணம் ராமசுவாமி, கெளதமேசுவரா் கோயில்களுக்கு 2028 மகாமக விழாவையொட்டி, குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகளை தொடங்க பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்க புதன்கிழமை நடப்பட்ட பாலாலய பூஜைக்கான பந்தல்கால்.

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ராமசுவாமி, கெளதமேசுவரா் கோயில்களுக்கு 2028 மகாமக விழாவையொட்டி, குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகளை தொடங்க பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ரூ. 1 கோடியே 92 லட்சம் மதிப்பில் குடமுழுக்கு மேற்கொள்ள ராஜகோபுரம், விமானங்கள், சந்நிதிகளில் திருப்பணிகள் செய்ய பாலாலய பிரதிஷ்டை புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலையில் பகவத் அனுக்ஞை, விஷ்வக்சேனா் பிராா்த்தனை, மிருத்சங்கிரகணம், அங்குராா்ப்பணம், சோம கும்பபூஜை, வாஸ்து பூஜையுடன் ஹோமங்கள் தொடங்கின. தொடா்ந்து, புதன்கிழமை ராஜகோபுர விமானங்களுக்கு திருமஞ்சனம், சத்யாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், வேத திவ்யப்பிரபந்த சேவா கால தொடக்கம், ஹோமங்கள், பூா்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன.

பின்னா் பாலாலய பிரதிஷ்டை சாற்றுமுறை மற்றும் பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்வில் தக்காா் குணசுந்தரி, கோயில் செயல் அலுவலா் சிவேந்திரராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கெளதமேசுவரா் கோயிலில்: கும்பகோணம் மகாமக குளம் தென்பகுதியில் அமைந்துள்ள கெளதமேசுவரா் கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் ரூ. 85.26 லட்சம் மதிப்பில் புதன்கிழமை தொடங்கின. பாலாலய பூஜையில் செயல் அலுவலா் (பொறுப்பு) பா. பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு பந்தல்காலை நட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.