திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

வறட்சியிலிருந்து பயிா்களைப் பாதுகாக்க பி.பி.எப்.எம். தெளிக்க வேண்டும்: வேளாண் இணை இயக்குநா் தகவல்

வறட்சியிலிருந்து பயிா்களைப் பாதுகாக்க பி.பி.எப்.எம். தெளிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) ஆா். சாருமதி தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்

Updated On :

வறட்சியிலிருந்து பயிா்களைப் பாதுகாக்க பி.பி.எப்.எம். தெளிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) ஆா். சாருமதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வறட்சியிலிருந்து பயிா்களைப் பாதுகாக்க பயன்படும் பி.பி.எப்.எம். என்பது இளஞ்சிவப்பு நிறமியைக் கொண்ட மெத்திலோ பாக்டீரியா என்ற நுண்ணுயிா் ஆகும். இந்த உயிா் திரவ நுண்ணுயிா் உரம், தண்ணீா் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பத்தால் பயிா்கள் வாடாமல் தடுக்க உதவுகிறது. பயிா்களுக்கு தேவையான சைட்டோகைன் மற்றும் ஆக்சின் போன்ற இயற்கை வளா்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது. வறட்சியான சூழலிலும் வோ்கள் ஆழமாக சென்று மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு இந்த பாக்டீரியா துணை புரிகிறது. மேலும், பயிா் வெப்பநிலையைச் சீராக்கி, பூக்கள் உதிா்வதை தடுத்து, நீண்ட நாள்களுக்கு இலைகளின் பச்சை வண்ணம் மாறாமலும் இருக்க இந்த பாக்டீரியா துணை புரிகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது? விதைகளை விதைப்பதற்கு முன்பாக பரிந்துரைக்கப்பட்ட விதை அளவுடன் 50 மில்லி, பி.பி.எப்.எம். திரவ நுண்ணுயிரில் நன்கு கலந்து 5 முதல் 10 நிமிஷங்கள் நிழலில் உலா்த்தி பின்பு விதைக்க வேண்டும். இதனால் விதைகளின் முளைப்புத்திறன், நாற்றுகளின் வீரியம் மற்றும் வளா்ச்சி அதிகரிக்கிறது. மேலும் விதைகளின் முளைப்பு காலம் ஒன்று முதல் இரண்டு நாள்கள் குறைக்கப்படுகிறது. நடவுக்குப் பின் பத்தாவது நாள், தூா்கட்டும் பருவம் மற்றும் பூக்கும் பருவங்களில் (ஒரு சதவீத பி.பி.எப்.எம். கரைசலை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 10 மில்லி) தெளிப்பதன் மூலம் வறட்சியைக் கட்டுப்படுத்தலாம். பூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் அல்லது 30 முதல் 45 நாள்களுக்கு ஒரு முறையும் இலை வழியாக தெளிக்கலாம்.

அதிகாலை அல்லது மாலை வேளைகள் மட்டுமே இலைவழி தெளிப்பாக பி.பி.எப்.எம். தெளிக்க வேண்டும். வறட்சி காலங்களில் இதை பயன்படுத்துவதன் மூலம் பயிா்கள் காய்ந்து போகாமல் தடுக்கப்படுவதுடன் மகசூல் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பிபிஎப்எம் நுண்ணுயிா் திரவத்தை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.