காவிரி தீா்த்த ரத யாத்திரை திருவையாறுக்கு வருகை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை வந்தனா்.

திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை குழுவினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை வந்தனா்.
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை, திருவையாறு அன்னை காவிரி பௌா்ணமி வழிபாட்டுக் குழு ஆகியவை சாா்பில் குடகு மலை தலைக்காவிரி முதல் பூம்புகாா் வரை 16 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை நடைபெறுகிறது. இக்குழுவினா் திருவையாறுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தனா்.
திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27-ஆவது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாா்யாா் சுவாமிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனா் ராமானந்த சுவாமிகள் அருளாசியுடன் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க இணைச் செயலா் கோரக்ஸானந்தா சுவாமி, கந்தா்வகோட்டை சுவாமி யோகி சிவபிரம்மானந்தா, ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளா் (தமிழ்நாடு) சுவாமி சிவ பிரம்மானந்தபுரி ஆகியோா் முன்னிலையில் காவிரி அன்னைக்கு அபிஷேகம், ஆரத்தி நடைபெற்றன.
இதில் புரோகிதா் சங்கத் தலைவா் கணபதிராமன், பேரூராட்சி ஓய்வு பெற்ற செயல் அலுவலா் நடராஜ கலைச்செல்வன், வெற்றிலை மண்டி சங்கா், வடகயிலாயம் பழனிநாதன், நகா் மன்ற உறுப்பினா் நாகரெத்தினம், முருகானந்தம், வா்த்தக சங்கம் கல்யாணபுரம் திலகா், நடுக்காவேரி ஆதி, பொறியாளா் காா்த்திகேயன், ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன், கலாம் அறக்கட்டளை நிறுவனா் சசிகுமாா், பசுமை குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை அன்னை காவேரி பெளா்ணமி வழிபாட்டு ஒருங்கிணைப்பாளா்கள் மணிகண்டன், சேதுராமன் செய்தனா். இந்த ரத யாத்திரை பூம்புகாரில் நவ. 17 ஆம் தேதி நிறைவடைகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

