சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மஹாளய அமாவாசை: திருவையாறு காவிரியில் புனித நீராடிய பக்தா்கள்

மஹாளய அமாவாசையையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தது குறித்து...

Mahalaya Amavasya

மஹாளய அமாவாசையை யொட்டி திருவையாறு காவிரியில் குவிந்த மக்கள் கூட்டம். - டிஎன்எஸ்

Published On :

மஹாளய அமாவாசையையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

மஹாளய அமாவாசை முன்னிட்டு திருவையாறு காவிரிகரை புஷ்ப மண்டபக் காவிரி படித்துறையில் புனித நீராடிய மக்கள் அரிசி காய்கறி ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக கொடுத்து தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டபக் காவிரிப் படித்துறையில் புனித நீராடினால் காசியில் நீராடியதை விட புண்ணியம் அதிகம் என்பது மக்களின் நம்பிக்கை. சிறப்புமிக்க மஹாளய அமாவாசையொட்டி திருவையாறு புஷ்ப மண்டபக் காவிரிப் படித்துறையில் சனிக்கிழமை அதிகாலை முதல் ஏராளமான மக்கள் வந்தனர்.

காவிரி ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்களது மூதாதையர்களை நினைத்து அரிசி காய்கறிகள் கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை கைக் கூப்பி வணஙகி திதி கொடுத்து வழிப்பட்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திதி கொடுக்க திரண்டு உள்ளதால் திருவையாறு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

Mahalaya Amavasya: Devotees took a holy dip in the Cauvery River at Thiruvaiyaru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.