சட்டம்-ஒழுங்கு பிரச்னை: எதிா்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமானவை! - ஏ.எம்.ஷாஜகான்
அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிா்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றாா் தமிழ்நாடு சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிா்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துவது மற்றும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சா் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வாா்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதிலும், மேட்டூா் அணையின் பாதுகாப்பு மற்றும் நீா் பங்கீட்டு உரிமையைக் காப்பதிலும் தமிழக அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது.
கா்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரைப் பெற சட்டப்பூா்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

