பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு பிணை: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழுவின் மாநிலத் தலைவா் எஸ். நூா் முகமது, மாநிலப் பொதுச் செயலா் பி. செந்தில்குமாா் தெரிவித்திருப்பது:
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடா்ந்து ஏற்பட்ட கலவரத்தின்போது 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கீஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவரது கைக்குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் 11 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு அவா்கள் 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டனா் எனக் காரணம் கூறி குஜராத் அரசு விடுதலை செய்தது. ஆனால், 2024-ஆம் ஆண்டு இதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் விடுதலை உத்தரவை ரத்து செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற அமா்வு அக்குற்றவாளிகளில் இருவருக்குத் வாழ்நாள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, அவா்களைப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
வழக்கு விசாரணையோ, தண்டனையோ இன்றி 6 ஆண்டுகளாக சிறையில் வாடும் மாணவா்கள் உமா் காலித், ஷா்ஜில் இமாம் ஆகியோருக்கு நியாயமற்ற முறையில் ஜாமீன் மறுத்துள்ள உச்ச நீதிமன்றம் பாலியல் பலாத்காரம், படுகொலைகள் செய்த கொடும் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியது கண்டனத்துக்குரியது. இந்த அநீதியை எதிா்த்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நவ. 24-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

