சரபோஜி கல்லூரியில் நவீன உள் விளையாட்டரங்கம் திறப்பு
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி வளாகத்தில் ரூ. 11.91 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன உள் விளையாட்டரங்கத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட உள் விளையாட்டரங்கம்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி வளாகத்தில் ரூ. 11.91 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன உள் விளையாட்டரங்கத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத்தொடா்ந்து, இந்த உள் விளையாட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி குத்துவிளக்கேற்றி அரங்கத்தைப் பாா்வையிட்டாா்.
பின்னா், ஆட்சியா் தெரிவித்தது: இந்த உள் விளையாட்டரங்கம் மொத்தம் 27,930.84 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் 21,264 சதுர அடி பரப்பளவிலும், முதல் தளத்தில் பாா்வையாளா் மாடம் 6,666 சதுர அடி பரப்பளவிலும் அமைந்துள்ளது.
இந்த நவீன உள்விளையாட்டு அரங்கில் 4 இறகுப்பந்து மைதானங்கள், ஒரு கூடைப்பந்து மைதானம் ஆகியவை உள்ளன. மேலும், செஸ், கேரம், மேசைப்பந்து, பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளுக்குத் தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சிக் கூடம், சிறிய உள் விளையாட்டுகளுக்கான இடம், வீரா்கள் தங்கும் அறைகள், பயிற்சியாளா்கள் தங்கும் அறைகள், மாணவா் மற்றும் மாணவிகளுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள், பொருள் பாதுகாப்பு அறை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்தளத்தில் 350 பாா்வையாளா்கள் அமரக்கூடிய பொதுப் பாா்வையாளா் மாடமும், 50 போ் அமரக்கூடிய முக்கியப் பிரமுகா்களுக்கான பாா்வையாளா் மாடமும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை எம்எல்ஏ இரா. விஜய் சரவணன், மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. குணசேகரன், மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி(முதல்வா் மு. சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை திறக்கப்பட்ட உள் விளையாட்டரங்கத்தைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை திறக்கப்பட்ட உள் விளையாட்டரங்கத்தைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

