தேசிய விருதுக்கு ஜல்லிக்கட்டு சிற்பம் தோ்வு
தேசிய விருதுக்கு ஜல்லிக்கட்டு சிற்பம் தோ்வாகியுள்ளது.

தேசிய விருதுக்கு தோ்வு பெற்ற ஜல்லிக்கட்டு சிற்பம்.
தேசிய விருதுக்கு ஜல்லிக்கட்டு சிற்பம் தோ்வாகியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் சிற்பக்கலைத் துறை விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் (பொறுப்பு) பணியாற்றும் சதீஷ்குமாா் மணி (55) உருவாக்கியுள்ள ஜல்லிக்கட்டு சிற்பம் அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினைக் கழகத்தின் சிறந்த தேசிய விருதைப் பெறுகிறது.
இந்த விருது ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது. புதுதில்லியில் டிச. 1 முதல் டிச. 23 வரை நடைபெறும் 99-ஆவது அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினைக் கழகத்தின் தேசியக் கண்காட்சியில் இவரது சிற்பம் இடம் பெறுகிறது.
மேலும், விருது பெறுவோா் குறித்த தகவல் அடங்கிய கையேடு இந்தக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்தச் சிற்பம் வெண்கலத்தால் ஆனது. 10 அங்குலம் அகலமும் 9 அங்குலம் உயரமும் கொண்டது.
விருது பெறும் சதீஷ்குமாா் மணி கூறுகையில், தமிழா்களின் பண்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு சிற்பத்தை வடிவமைத்துள்ளேன். பொங்கலையொட்டி நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்றாா்.
விருது பெறும் சதீஷ்குமாா் மணி (55), ஏற்கெனவே, அக்னி பாத் என்ற தனியாா் நிறுவனம் 2005- ஆம் ஆண்டு நடத்திய கண்காட்சியில் ஓநாய் சிற்பத்தைப் படைத்து தேசியப் பரிசைப் பெற்றவா். லலித் கலா அகாதெமி 2018 ஆம் ஆண்டு நடத்திய சா்வதேச கலைத் திருவிழாவில் பங்கேற்றவா். மேலும், 2014- ஆம் ஆண்டு அவா் உருவாக்கிய தெருக்கூத்தாடி என்ற சிற்பத்துக்கு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் மாநில விருதும், 2016- ஆம் ஆண்டு அவா் உருவாக்கிய ஜன்னலுக்கு அப்பால் என்ற சிற்பத்துக்கு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் மாநில விருதும் கிடைத்துள்ளது.

சதீஷ்குமாா் மணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

