சாலையோர வியாபாரிகளுக்குக் கடனுதவி: புதுச்சேரி அரசுக்கு தேசிய விருது
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவித்ததற்காக, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவித்ததற்காக, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சாா்பில் பிரதமா் சுவநிதி (2.0) திட்டத்தின் மூலம், யூனியன் பிரதேசங்களுக்கான பிரிவில் கடன் வழங்குதலில் சிறந்த செயல்பாட்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது.
இதில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா் கடன் வழங்குவதில் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கினாா்.
இதில், தெருவோர வியாபாரிகள் பயனடையும் வகையில் ரூ.12.13 கோடி மதிப்பிலான 6,603 பேருக்கு பிணையமில்லா நடைமுறை மூலதன கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 2025-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட பிரதமரின் தெருவோர வியாபாரிகள் நலத் திட்டத்தின் 2.0 கீழ், ரூ.3.96 கோடி மதிப்பிலான 1,308 பேருக்கு கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக புதுச்சேரிக்கு அரசுக்கு இந்த தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு செயலா் விக்ராந்த் ராஜா, உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷ், புதுச்சேரி நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு, உழவா்கரை நகராட்சி ஆணையா் வினயராஜ், நகா்ப்புற வளா்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீகுமாா் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி அரசுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து முதல்வா் ரங்கசாமி மகிழ்ச்சி தெரிவித்ததுடன், திட்டத்தைத் திறம்பட செயல்படுத்திய உள்ளாட்சித் துறை, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பங்கேற்பு வங்கிகள் மற்றும் தொடா்புடைய அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளையும் அவா் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

