ஆலங்குளத்தில் தொழில்முனைவோா் கடனுதவி, கல்விக்கடன் அளிப்பு
தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து தொழில் முனைவோருக்கான கடனுதவி , கல்விக் கடன் வழங்கும் விழாவை ஆலங்குளம் தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடத்தின.

மாணவிக்கு கல்விக் கடனுக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் மோனிகா ராணா.
தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து தொழில் முனைவோருக்கான கடனுதவி , கல்விக் கடன் வழங்கும் விழாவை ஆலங்குளம் தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடத்தின.
இந்த விழாவுக்கு, ஆட்சியா் மோனிகா ராணா தலைமை வகித்து பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன்வழங்குவதற்கான இலக்காக ரூ.2000.45 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலவும் மூலப் பொருள்களின் வளம், உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளா்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்வோா்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது என்றாா் அவா். இம் முகாமில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் 58 நபா்களுக்கு ரூ.3.77 கோடி கடனுதவி மற்றும் ரூ. 2.86 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

