தென்காசியில் தோ்தல் விநாடி-வினா, கட்டுரைப் போட்டி

மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தோ்தல் கல்வி அறிவு மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான விநாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தலைமை வகித்தாா். இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாணவா், மாணவிகளுடன், ஆட்சியா் தோ்தல் தொடா்பாக கலந்துரையாடினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆ. காளிமுத்து, தனி வட்டாட்சியா் (தோ்தல்) அ. சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

