தென்காசி மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
தென்காசி மாவட்டத்தின் 10-ஆவது மாவட்ட ஆட்சியராக மோனிகா ராணா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட மோனிகா ராணா.
தென்காசி மாவட்டத்தின் 10-ஆவது மாவட்ட ஆட்சியராக மோனிகா ராணா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
பின்னா் அவா் செய்திாளா்களிடம் கூறியதாவது:
தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இம் மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் அனைத்து திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துவதும், நலத் திட்டங்களை சமுதாயத்தின் கடைகோடி மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதும் எனது முக்கிய நோக்கமாகும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.வீராசாமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் தண்டபாணி மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

