
நெகழி பொருள்கள் விற்பனை 4 கடைகளுக்கு அபராதம்
கும்பகோணம் பகுதியில் நெகிழி பொருள்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு
கும்பகோணம் பகுதியில் நெகிழி பொருள்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகா் நல பொறுப்பு அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் மாநகராட்சியின் பேருந்து நிலையம், சா்ச் ரோடு, மோதிலால் தெரு, மகாமகக் குளம், கும்பேசுவரா் கோயில் சந்நிதி, இராமசாமி கோயில் சந்நிதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழி பொருள்கள் உள்ளனவா என சோதனையிட்டனா்.
இந்த சோதனையின் போது 4 கடைகளில் இருந்து 1 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 4 கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




